Sunday, November 21, 2021

ஜாதி

உலகில் எல்லா மனிதக் கூட்டங்களுக்கிடையேயும் பல்வேறு வடிவிலான பிரச்சனைகள். நம் நாட்டில் ஜாதி பெரிய பிரச்சனையாக பேசப்படுகிறது. சில நூறு வருடங்களாக பல்வேறு காலங்களில் சில தலைவர்கள் இதனை எதிர்த்து போராடிச் சென்றுள்ளனர், தற்போது சிலர் போராடியும் வருகிறார்கள். உண்மையில் ஜாதி பிரச்சனையா?! இது ஒழிந்தால் மனிதர்கள் அமைதியாக, சந்தோஷமாக வாழ முடியுமா என்று பார்ப்போம். இந்த ஜாதி என்ற பெயர் ஒன்று இல்லாத பகுதிகளில் மக்கள் சமமாக நடத்தப்படுகிறார்களா, பிரச்சனைகள் இல்லாமல் வாழ்கிறார்களா?! என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கிறது. அடிப்படை பிரச்சனை தான் பின் என்ன? இது எங்கிருந்து தொடங்குகின்றது?


பிறந்த உடனேயே பிறந்தது ஆணா, பெண்ணா என்று தெரிந்தவுடன் ஏற்படும் வித்தியாசத்தில் இருந்தே தொடங்குகின்றது மனிதர்களின் பிரச்சனை. பின் தோலின் நிறத்தில் கூட ஏற்றத் தாழ்வை மனிதன் காணத் தொடங்குகிறான். மனித மன(தி-க்குரங்கி)-ற்கு பிறந்த பாலை, மதத்தை, ஊரை, குலத்தை, ஜாதியை, கற்ற கல்வியை, பெற்ற செல்வத்தை, தாய் மொழியை, வாழும் பகுதியை, பெற்ற பதவியை (தொழில்), ..... வைத்து “தான்” மற்றவர்களை விட (மனோ ரீதியாக) சற்று உயர்ந்தவன் என்று எப்போதும் காட்டிகொள்வது அடிப்படை வியாதியாகத் தெரிகின்றது.  இதில் எல்லாவற்றிலும் ஒன்று பொதுவானதாகத் தெரிகின்றது. அது “தன்னை” பெரியவனாகக் காட்டிகொள்வதில் இருக்கும் தன்முனைப்பு மட்டுமே. ஒருவன் நேரடியாக “தான்” மற்றவர்களை விட பெரியவன் என்று சொல்லிக் கொண்டால் அசிங்கமாக இருக்கும், சமூகத்தில் கௌரவமாக இருக்காது என்று அவன் “தான்” சார்ந்த, தோதான ஏதாவது ஒன்றை தொங்கிக் கொண்டு அது பெரியது (அதனால் நானும் பெரியவன்) என்று பிதற்றிக் கொண்டிருக்கிறான்; நாய் எலும்பை கடிப்பதினால் சுவை கிடைப்பதாக எண்ணுவது போல. எந்த மதமும், மொழியும், இனமும், ஊரும், கல்வியும், பணமும், பாலும், பதவியும் தன்னைத் தானே பெரியதாகக் காட்டிக் கொள்வதில்லை; அது சாத்தியமும் இல்லை.


அதனால் தான் இந்த பூமியில் நடந்த ஞானிகளோ, பெரியவர்களோ ஜாதிகள் ஒழிந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லவில்லை, அதற்காக போராடவுமில்லை. நேரடியாக அடிப்படை வியாதியான அகங்காரத்தையே தொலைக்க வழி சொல்லிப் போனார்கள். அடிப்படை வியாதி அழியாமல் எந்த வித மனித ஏற்றத்தாழ்வும் முற்றும் அழியாது. ஆண், பெண் ஏற்றத்தாழ்வை ஒரு பேச்சுக்கு எடுத்துக் கொள்வோம். நான் பெரியவன்/ள் — எங்கள் இனம் தான் பெரியது என்ற பிரச்சனையை, இரு பாலினருக்கும் இருக்கும் வித்தியாசங்களை களைந்தால் சரியாகி விடும் என்பது எவ்வளவு கோமாளித்தனமோ அவ்வளவு தான் ஜாதி அழிந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று பேசுபவர்களின் வாதமும். ஏற்றத் தாழ்வுகள் வெளி அடையாளங்களால் வருவதில்லை, தனி மனித மனங்களால் தான் உண்டாகின்றன. அதனால் தான் ஞானிகள் உன்னை சரி செய்துக்கொள் உலகம் தன்னால் சரியாகிவிடும் என்கிறார்கள். அப்படியென்றால் ஜாதீய ஏற்றத் தாழ்வுகளில் தவறு இல்லையா என்றால் தவறு தான். ஆனால் அது ஜாதியால் வருவதில்லை அதை வைத்து விளையாடும் தனி மனித மனத்தால் தான் பிரச்சனை. மற்ற அடையாளங்களால் வரும் ஏற்றத் தாழ்வுகளும் அதே அளவு வன்மையானவை தான், ஒன்றுக்கொன்று குறைந்தவை அல்ல. மதத்தில், மொழியில், இனத்தில், ஊரில், தொழிலில், தோலில் பிரச்சனை இல்லை.


அப்படியென்றால் ஜாதியை ஒழிக்க வேண்டி போராடுபவர்கள் யார் என்றால் ஒன்று அவர்களுக்கு மனிதனின் அடிப்படை வியாதியை முழுதாக புரிந்துக் கொள்ளும் அளவு பார்வை/பக்குவம் இல்லை அல்லது ஜாதியை வைத்து மக்களிடையே அரசியல் செய்கிறவர்கள், இந்த இரண்டினுள் ஒன்றில் தான் இவர்கள் வருவார்கள்.


மனித மனத்தின் இந்த மனோ ரீதியான அடிப்படை வியாதியை (அகங்காரம் – ஏற்றத் தாழ்வு ஆட்டம்) புரிந்துக் கொண்டு அமைதியடைபவர்கள் ஞானிகளாகிறார்கள்-பிறவிச் சுழலில் இருந்து விடுபடுகிறார்கள். மற்றவர்கள் என்றேனும் ஒருநாள் அல்லது ஏதோ ஒரு பிறவியில் புரிந்து கொள்வார்கள், அமைதியடைவார்கள். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் இல்லை விடை, இதில் “நான்” என்ன செய்யப்போகிறேன் என்பதில் தான் இருக்கிறது “விடுதலை’/மோட்சம்”.


#caste_Part_1


#caste_politics #mind_game #freedom #moksha #ஜாதி_அரசியல் #மனம் #விடுதலை  #மோட்சம் #மோக்ஷம்

Friday, August 27, 2021


மரியாதை

https://m.facebook.com/story.php?story_fbid=791751854180947&id=100000384207446

நமக்கு மத்தவங்க தரும் மரியாதையை வைத்து ஒரு ஸ்பூன் தண்ணீர் கூட வாங்க முடியாது , பிறகு எதற்கு எல்லோரும் அதை பெற ஓடியே வாழ்கையை வீ:ணடித்துக்கொல்(ள்)கிறோம் தெரியவில்லை !? :

https://m.facebook.com/story.php?story_fbid=1569191669770291&id=100000384207446

 

ஆணாக இருப்பதில் பிரச்சனை இல்லை. ஆண்தான் பெரியவன், சிறந்தவன்...ன்..ன் என்பது தான் எல்லா தலைவலிக்கும் ஆரம்பம். இந்த ஆண் என்னும் இடத்தில் அது போல் வேறு எந்த அடையாளத்தையும் (label) வைத்துப் பாருங்கள், விளைவு ஒன்றே. மன ரீதியாக இவற்றிலிருந்து விலகி வாழ்வதே விடுதலை/மோக்ஷம். இதற்கு மேல் எதுவும் கிடையாது. எத்தனை அடையாளங்கள் வேண்டுமாலும் இருக்கலாம் (gender, colour, race, language, religion, nation, education, caste, money, fan(atic) of..) பிரச்சனை இல்லை. இவற்றின் மூலம் தன்னை உயர்வாகவோ தாழ்வாகவோ எண்ணிக்கொள்வதே வியாதி/கட்டு. Psychological craving for superiority or feeling inferior through labels is the only disease/problem of mankind. Getting out of these labels psychologically is the real freedom/liberation. Mystery behind mankind is that simple. Who is interested in simple sane living is the only question before all !!

 

Tuesday, May 25, 2021

 No natural entities (Sun, water, rain, trees ... ) boast themselves that they are rendering help to fellow beings! They remain as they are and don't expect recognition for their work. But we human beings need recognition for every deed in the form of labels (Revered person, Swamiji, Social worker, Good person, humble blah blah ...) and caught in the mess. Flow like a river 🙂

Monday, March 1, 2021

 ஒரு இடத்திற்கு போக அந்த இடத்துடைய முகவரியை காகிதத்திலோ அல்லது ஏதோ ஒரு முறையில் அதற்கான வழியை குறித்து வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அந்த இடம் போய் சேர்ந்த பிறகு அந்த பேப்பருக்கோ குறித்து வைத்த பொருளுக்கோ எந்த மரியாதையும் கிடையாது தேவையும் இல்லை. சென்று சேர்ந்தவர் மற்றவர்களுக்கு எளிதாக வழிகாட்ட முடியும் எதன் துணையுமின்றி. அந்தப் காகிதத்திற்கான உண்மையான மரியாதை அந்த சேருமிடத்தை சரியாக சென்று சேர்வதில்தான் இருக்கிறது. அதை போலத் தான் உண்மையைத் தேடி போகிறவர்களுக்கு உதவுவதற்காக மதம், சடங்கு, சம்பிரதாயங்கள் போன்ற கட்டமைப்புகளை உருவாக்கியிருக்கியிருக்கிறார்கள் முன்னோர்கள். தன்னை அறிந்த பிறகு இந்த பேப்பர் எப்படி தேவை இல்லையோ அது போல இந்த கட்டமைப்புகள் தேவைப்படா.

கையில் வைத்திருக்கும் காகிதத்திற்கு ஒருவர் மிகுந்த மரியாதை வைத்திருந்தால் அல்லது மற்றவர் கொண்டுள்ள முறையை ஏளனமாக பார்த்தால் அவர் சேர வேண்டிய இடம் இன்னும் சேரவில்லை என்று அர்த்தம். மைல் கல்லை வணங்குபவன் ஊர் போய் சேர்வதில்லை. மைல் கல்லுக்கான மரியாதை-பயன் அது காட்டும் இடம் போய்ச் சேர்வதே.

~ m

March 1, 2019

Thursday, February 18, 2021

 To live happy and peacefully

Nobody wait for others recognition, approval, applause, award when they eat or answer the call of nature. Simply don't bother about others there and don't want that too strictly. There it solely depends on one’s self-satisfaction and happiness. But in all other acts we crave for others approval, applause, etc. Most of the actions based on that (recognition, approval, applause, award) too. Why not simply live and act as in those two acts which solely depend on self satisfaction and be happy and peaceful!!?? Only those have problem in eating/constipation needs attention/treatment.

சாப்பிடும்போதும், இயற்கை உபாதையைக் கழிக்கும் போதும் யாரும் மற்றவர்கள் அளிக்கும் அங்கீகாரம், ஒப்புதல், கைதட்டல், விருதுகளுக்காகக் காத்திருப்பதில்லை; கவலைப்படுவதுமில்லை; விரும்புவதுமில்லை. ஒருவரது சுய திருப்தியும், சந்தோஷமுமே அடிப்படையாகிறது. ஆனால் மற்ற எல்லா செயல்களிலும் அவர்கள் மற்றவர்களின் ஒப்புதலுக்காகவும், கைதட்டல்களுக்காகவும் ஏங்குகிறார்கள்!! ஏன் அந்த இரு நிகழ்வுகளிலும் ஈடுபடுவதைப் போல் எளிமையாக இயங்கி மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழக்கூடாது!? சாப்பிடுவதில் பிரச்சனையோ அல்லது மலச்சிக்கல் இருப்பவருக்குத்தான் கவனமும்/சிகிச்சையும் தேவைப்படுகிறது.