ஒரு இடத்திற்கு போக அந்த இடத்துடைய முகவரியை காகிதத்திலோ அல்லது ஏதோ ஒரு முறையில் அதற்கான வழியை குறித்து வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அந்த இடம் போய் சேர்ந்த பிறகு அந்த பேப்பருக்கோ குறித்து வைத்த பொருளுக்கோ எந்த மரியாதையும் கிடையாது தேவையும் இல்லை. சென்று சேர்ந்தவர் மற்றவர்களுக்கு எளிதாக வழிகாட்ட முடியும் எதன் துணையுமின்றி. அந்தப் காகிதத்திற்கான உண்மையான மரியாதை அந்த சேருமிடத்தை சரியாக சென்று சேர்வதில்தான் இருக்கிறது. அதை போலத் தான் உண்மையைத் தேடி போகிறவர்களுக்கு உதவுவதற்காக மதம், சடங்கு, சம்பிரதாயங்கள் போன்ற கட்டமைப்புகளை உருவாக்கியிருக்கியிருக்கிறார்கள் முன்னோர்கள். தன்னை அறிந்த பிறகு இந்த பேப்பர் எப்படி தேவை இல்லையோ அது போல இந்த கட்டமைப்புகள் தேவைப்படா.
கையில் வைத்திருக்கும் காகிதத்திற்கு ஒருவர் மிகுந்த மரியாதை வைத்திருந்தால் அல்லது மற்றவர் கொண்டுள்ள முறையை ஏளனமாக பார்த்தால் அவர் சேர வேண்டிய இடம் இன்னும் சேரவில்லை என்று அர்த்தம். மைல் கல்லை வணங்குபவன் ஊர் போய் சேர்வதில்லை. மைல் கல்லுக்கான மரியாதை-பயன் அது காட்டும் இடம் போய்ச் சேர்வதே.
~ m
March 1, 2019